இறக்காமத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான தாய், மகன் உள்ளிட்டோரிடம் விசாரணை

53 0

இறக்காமம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (30) மாலை  ஐஸ் போதைப்பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இறக்காமம் விசேட புலனாய்வு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இறக்காமம் பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது  6 மில்லி 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்களான தாயும் மகனும்  கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில்  வைக்கப்பட்டுள்ளதுடன்,  அவர்களை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.