மகிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்த தினேஸ் தீவிர முயற்சி

45 0

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவி;ற்கும்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அரசியல்ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஸ் குணவர்த்தன தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இரண்டு தலைவர்களிற்கும் நெருக்கமான அரசியல்வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.

தனது பாடசாலைத்தோழனான ஜனாதிபதியுடனும் முன்னாள் ஜனாதிபதியுடனும் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள தினேஸ் குணவர்த்தன,தேர்தலில் ஜனாதிபதிக்கான பொதுத்தளத்தை ஏற்படுத்துவதற்காக  அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளையும் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் பொதுஜனபெரமுனவின் சார்பி;ல் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என பசில்ராஜபக்ச பிடிவாதமாகயிருந்ததால் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.ஜனாதிபதிக்கு வேறு ஒருவரை நிறுத்துவது என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மத்திய குழு தீர்மானி;த்துள்ளது.

தேர்தல் கூட்டணியொன்றை ஏற்படுத்துவதற்காக பிரதமர் ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருந்தார்.

இருவரையும் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை பிரதமர் தொடர்கின்றார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.