ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை விரைவில் செலுத்துமாறு வேண்டுகோள்

53 0

இறுதி தருணத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்த்துக் கொள்வதற்கு ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை விரைவில் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (31) வரை 6 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்தி ரத்ன சுயாதீன வேட்பாளராகவும்,புதிய சுதந்திர முன்னணியின் வேட்பாளராக ஓசல லக்மால் அனில்  ஹேரத் என்பவரும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு எஸ்.ஜி.லியனகே என்பவரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும்,தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு எஸ்.கே பண்டாரநாயக்கவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (01) தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில்  ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்துவதற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50,000 ரூபாவும், சுயாதீன வேட்பாளர் 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

 

  1. சுயாதீன வேட்பாளர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
  2. சுயாதீன வேட்பாளர் – சரத் கீர்த்தி ரத்ன
  3. புதிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் – ஓசல லக்மால் அனில்  ஹேரத்
  4. இலங்கை தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் – எஸ்.ஜி.லியனகே
  5. ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் – சஜித் பிரேமதாச
  6. தேசிய அபிவிருத்தி முன்னணியின் வேட்பாளர்- எஸ்.கே பண்டாரநாயக்க
  7. தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் – விஜயதாச ராஜபக்ஷ