பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களுடன் புதன்கிழமை (31) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சஜித் பிரேமதாஸ இங்கு மேலும் தெரிவிக்கையில்,
உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரை பாதுகாக்கும் இரட்டைக் கொள்கைகளை கொண்டமைந்த அரச கொள்கையொன்று தேவை என்றாலும், இன்று, உள்நாட்டு உற்பத்தியாளர் மீது 18 வீத வற் வரியை விதித்து, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் மீதான வரியை நீக்கி, ஒரு சிலரைப் பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள இந்த சமநிலையற்ற கொள்கை மிகவும் நியாயமற்ற ஒன்றாகும்.
ஐந்து நட்சத்திர விடுதிகளில் தேசிய உற்பத்தியாளர்களுக்கு உரிய இடம் வழங்குவோம் என வீராப்பு அடித்தாலும் இன்று தேசிய உற்ப்பத்தியாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கொடுக்க வேண்டிய ஊக்கமும் பக்கபலமும் வழங்கப்படவில்லை.
இறக்குமதியாளருக்கு சலுகை வழங்கி, தேசிய உற்பத்தியாளருக்கு சுமையை ஏற்படுத்துவதும் நிலைமைகளை மாற்ற வேண்டும். தற்போதைய அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை மாற்றாவிடின், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நாம் இதனை மாற்றியமைப்போம்.
தற்போது இயற்கை தேங்காய் எண்ணெய் பொருட்கள் என்ற வர்த்தக நாமத்தின் கீழ் தரம் குறைந்த செயற்கை தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
இவை இரசாயன ரீதியாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் ஆகும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர தேங்காய் எண்ணெய் என்ற வர்த்தக நாமத்தின் கீழ் தரம் குறைந்த தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வது வருவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இவ்வாறு நடந்து வரும்வேளையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மௌனம் காத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நுகர்வோர் அதிகார சபை மக்களின் உரிமைகளை மீறியுள்ளது. இதற்காக இலஞ்ச ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.