சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

40 0

நுவரெலியா, நோர்வூட்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட்  பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, பொகவந்தலாவை பகுதியில் வசிக்கும் 32 மற்றும் 49 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.