கற்கள் மற்றும் பொல்லால் தாக்கி நபரொருவரை கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (30) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, ஒருகொடவத்தை, பிரதேசத்தைச் சேர்ந்த நால்வருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு கொழும்பு, ஒருகொடவத்தை, சாந்தவத்தை பகுதியில் நபரொருவரை கற்கள் மற்றும் பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவமொன்று தொடர்பில் 6 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளி விசாரணையின் போது உயிரிழந்துள்ள நிலையில் போதியளவு ஆதாரம் இல்லாததால் ஆறாவது குற்றவாளி நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஏனையவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.