வேட்டை நாயின் காட்டுமிராண்டி தாக்குதலில் 20 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்ததற்கு, ஜேர்மன் உள்ளாடை நிறுவன பெண் அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் உள்ளாடை நிறுவனம் ஒன்றின் தயாரிப்பு மேம்பாட்டு தலைமை அதிகாரியாக ஆக இருப்பவர் Ann-Kathrin Meyer. இவர் Alfie எனும் வேட்டைநாயை வளர்த்து வருகிறார்.
இங்கிலாந்தின் Macclesfieldயில் உள்ள Wildboarclough எனும் கிராமத்தில், கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி Alfie ஆட்டு மந்தையில் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது.
இதில் 20 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. விவசாயி தனது ஆடுகளை காப்பாற்ற துரத்தியபோது தான் Alfieயின் தாக்குதல் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த பொலிஸார் Meyer மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு முன்பே அவரின் நாய் இதுபோல் நடந்துகொண்டதற்காக Meyer எச்சரிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், Crewe மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் Meyer, ஆபத்தான முறையில் நாயை வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார். இதனால் அபராதம், செலவுகள் மற்றும் இழப்பீடு என அவருக்கு 4,500 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 4,83,000 ரூபாய்) செலுத்த உத்தரவிட்டது.
இந்த வழக்கில் Alfie அழிக்கப்பட வேண்டும் என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், Meyer ஜேர்மனியில் வாழ்ந்தபோது Alfie எந்த மனிதர்கள், விலங்குகளை துன்புறுத்தியதில்லை என்றார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயி பொறுமையாக இருப்பதால் மகிழ்ச்சியடைவதாகவும், அவரது இந்த இழப்பிற்கு நஷ்டஈடு தர விரும்புவதாகவும் கூறினார்.