வைகோவின் விளக்கமறியல் நீடிப்பு

231 0

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் தமிழக அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் வைகோவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் இந்த மாதம் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறனி புத்தக வெளியீட்டு விழாவில், வைகோ உரையாற்றினார்.

இதன்போது அவர், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு மத்திய அரசாங்கமும் திராவிட முன்னேற்ற கழகமும் ஆதரவளித்ததாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் தேச தூரோக குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்ட வைகோ பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அந்த வழங்கு விசாரணைகளுக்கு அமைய இந்த மாதம் 03ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்ட அவர் நேற்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று அவர் சார்பில் பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், அது நிராகரிக்கப்பட்டு வைகோவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.