மைத்திரிக்கு வியட்நாம் ஜனாதிபதி அழைப்பு

255 0

வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வியட்நாம் ஜனாதிபதி டிரான் டய் குவான்ங் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன் குறித்த நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஹெநொய் நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து அந்நாட்டு ஜனாதிபதி  டிரான் டய் குவான்ங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.