விடுதலைப் புலிககளின் கொள்கையை மீறிப்போன தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கின்றோம் – ஜனநாயகப் போராளிகள் கட்சி

513 0
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுதான் ஜனநாயக் போராளிகள் கட்சி எனவே விடுதலைப் புலிகளுக்கு ஒரு கொள்கை இருக்கின்றது அந்த கொள்கையை மீறி செயற்படுகின்ற அரசியல் கட்சியோ  போராளிகளோ அல்லது யாராக இருந்தாலும் அதனை நிராகரிப்போம் அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  இன்று எங்களுடைய மக்களின் கொள்கையில் இருந்து விலகிப்போன காரணத்தினால் அவர்களை நிராகரிக்கின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர் தெரிவித்தார் .
ஜனநாயகப் போராளிகள் கட்சி அன்னை பூபதியின் 29ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு நாளை 19 ம் திகதி மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது இது தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு  மட்டக்களப்பு வொஸ் ஒப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இன்று இடம்பெற்த இதில் கலந்து கொண்ட   கட்சியின் செயலாளர் இராசையா கதிர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டு அவர்களுடைய நெறிப்படுத்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டது தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு .அந்தக் காலத்திலும் சரி இந்தக் காலத்திலம் சரி பொருளாதாரத்தை நோக்கித்தான் அவர்களது பயணம் போகிறதே தவிர மக்கள் சம்பந்தமான அவர்கள் எந்த ஒரு அபிவிருத்திகளையும் செய்வதற்கு தீர்மானிக்கவில்லை.
அந்தநேரத்தில் மக்களின் ஒரே ஒரு தெரிவு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆனால் இனிவரும் காலங்களில் அப்படி இருக்காது ஜனநாயப் போராளிகள் கட்சி  தலைமைத்துவத்தை வழங்க தீர்மானித்துள்ளது எனவே அந்த நிலமை இனி மாறும் எங்களுடைய இயக்கத்தினுடைய போராளிகள் முன்னாள் போராளிகள் என சொல்வதை இன்றுடன் விடுகின்றோம்.
அதனை அனைவரும் விடவோண்டும் அவர்களின் வாழ் நாள் வரைக்கும் அவர்கள் போராளிகள் அந்த போராளிகள் எந்தவித அச்சமம் இன்றி விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவான ஜனநாயப் போராளிகளுடன் இணைந்து மக்களுக்காக சேவையை செய்ய முன்வரவேண்டும்
மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வு திட்டத்திற்கு முன்னர் அபிவிருத்தி சம்மந்தமாக முன்னேற்ற வேண்டியுள்ளது சமூக பிரச்சனைகளில் இருந்து வெளியே கொண்டு வரவேண்டியுள்ளது .
அதேவேளை மக்கள் இழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என 1987 ஆண்டு  தியாகி திலீபன் சொன்னதுபோல் இன்று அந்த இழிவு நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனவே இதில் இருந்து மக்களை மீட்டெடுக்கவேண்டிய பெறுப்பு எமக்கு இருக்கின்றது
எனவே போராளிகள் அனைவரும் ஒன்றினைந்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை உருவாக்க ஜனநாயகத்தில் அனைவரும் கிழந்தெழுந்து எமது மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்றார்
அதேவேளை ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முதன்முதலாக அன்னை பூபதியின் 29ம் ஆண்டு நிகழ்வை புதன்கிழமை நாளை  மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு அனுஸ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் போராட்டத்தை அகிம்சைவழியான போராட்டமாக மாற்றியவர் அன்னையவர்கள்.
கடந்த 10 வருடங்களாக அன்னை பூபதியின் நினைவு தினத்தினை யாரும் அனுஸ்டிக்கவில்லை . எதிர் காலத்தில் இவ்வாறான நினைவு தினங்களை எமது கட்சி முன்னெடுத்துச் செல்லும்.
எனவே இத் தருணத்தில் நாளை நடைபெறுகின்ற நினைவு தின நிகழ்வுக்கு
மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டத்திலுள்ள அனைத்துப் போராளிகளுள் அனைவருக்கும் கலந்து கொள்ளுமாறு ஜனநாயகப் போராளிகள் கட்சி அழைக்கின்றனர் என  ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை இணைப்பாளர் கணேசன் பிரபாகரன் தெரிவித்தார்