நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் – காலியில் ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிப்பு

21 0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப்பணத்தை ஏற்கனவே கட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காலி மாநகர சபை மைதானத்தில் இன்று (27) இடம்பெற்று வரும் “ஒன்றாக வெல்வோம் –  காலியில் நாம்” பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.

மேலும் அங்கு அவர், இளைஞர்களுக்கான சிறந்த இலங்கையை உருவாக்க அனைத்து அரசியல்வாதிகளும் அரசியல் பேதங்களை விடுத்து ஒன்றிணைய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அநுராதபுரம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதா உல்லா மற்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி ஆகியோரும் இந்த பொதுக்கூட்ட மேடையில் இணைந்து கொண்டுள்ளனர்.

இஷாக் ரஹ்மான் கடந்த பொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கலாவெவ தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பொது கூட்டத்தொடர் https://www.facebook.com/ranil.wickremesinghe.leader எனும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.