அன்னை பூபதியின் 29வது நினைவு கூரல் மட்டக்களப்பு நாவலடியில்

562 0

தழிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழர் உரிமையை வலியுறுத்தியும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் உண்ணா விரதமிருந்த நிலையில் உயிர் நீத்த அன்னை பூபதியின் 29வது நினைவு கூரல் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அவரது கல்லறையில் நாளை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தநிகழ்வு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் அன்னை பூபதியின் உறவினர்களால் சமாதிக்கு மாலையணிவிப்பு, மலரஞ்சலி, நினைவுச் சுடரேற்றல், அகவணக்கம் மற்றும் நினைவுரைகள் என்பன இடம்பெறவுள்ளன.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் நீராகாரம் மட்டும் அருந்தி சுமார் 5 வார காலம் உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உயிர் நீத்தார்.

தமிழ் மக்களின் உரிமை மற்றும் இந்திய சமாதானப் படையினரின் அடாவடித் தனங்கைளை நிறுத்துமாறு வலியுறுத்தி அவர் அஹிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையிலேயே அவர் உயிர் நீத்தார்.