சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்டவிடம் தேர்தல் தொடர்பான பணிகள் ஒப்படைப்பு?

24 0
image
தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபருக்கான கடமைகளை முன்னெடுப்பதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழு  தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் டிவை அசங்க கரவிட்டவை கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்கு தேர்தல் தொடர்பான வர்த்தமானியை வெளியிட்ட பின்னர் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்டவை சந்தித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் ஒருவர் இல்லாத நிலையில் தேர்தலை நடத்த முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அரசமைப்பின்படி தேர்தல் ஆணைக்குழு தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து  பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கவேண்டும்,பணிக்கு தேவையான பொலிஸ்உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறித்து பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கவேண்டும்.

தேர்தலை நடத்தவதற்கு இவ்வாறான விடயங்கள் அவசியம் என்றால் பொலிஸ்மா அதிபர் இன்றி தேர்தலை நடத்துவது எவ்வளவு தூரம் சாத்தியம் என கேள்விகள் எழுந்துள்ளன.

தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அசங்க கரவிட்டவைநியமித்துள்ளதால் அடிப்படை தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பிரச்சினை எழாது என தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.