ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!

17 0

இவ்வருடம் ஜூலை 15 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு 1,095,675 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலை தொடருமானால், போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்ச நிலையை பதிவான 2018 ஆம் ஆண்டை விடவும் நல்ல நிலையை அடைய முடியும் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல், கொவிட் – 19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுற்றுலா வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது எனவும் ஆனால் சுற்றுலா அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களால் ஆரம்பிக்கப்பட்ட முறையான வேலைத்திட்டத்தினால் தற்போது வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நாட்டில் சுற்றுலாத் துறை திருப்திகரமான நிலையில் இல்லை. குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல், கொவிட் -19 தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி ஆகியவை சுற்றுலாத் துறையை வீழ்ச்சியடையச் செய்தன. ஆனால் சுற்றுலா அமைச்சும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் இணைந்து முன்னெடுத்த திட்டத்தின் மூலம் தற்போது வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைக்கின்றன.

அதன்படி, 2022ஆம் ஆண்டில் 719,978 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2023 ஆம் ஆண்டில் 1,487,303 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர். 2024 ஜூலை 15ஆம் திகதிக்குள், இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,095,675 ஆக பதிவாகியுள்ளது.

இதன்படி, கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என ஊகிக்க முடிகிறது.

போருக்குப் பிறகு, 2018 இல் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தந்திருந்தனர். அந்த ஆண்டில் 2,333,796 பேர் இலங்கைக்கு வந்தனர். அப்போதைய சுற்றுலா வர்த்தக வருமானம் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்ந்தால், 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்த நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும், அதிலிருந்து வரும் வருமானத்தையும் 2018 ஆம் ஆண்டை விட அதிகரித்துக்கொள்ள முடியும்.” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய தாவரவியல் பூங்காத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) எச்.ஜி

ஜயசேகர,

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே 1,773,048 – 1,925,129 வரையிலான எண்ணிக்கையாக பதிவானது. அவர்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே 103,322 – 227,729 வரையில் காணப்பட்டது.

ஜூன் 2024 வரை தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 965,468 ஆகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 183,674 ஆகவும் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது 96% அதிகரிப்பாகும்.

இதன்படி, 2022ஆம் ஆண்டு வருமானம் 420.02 மில்லியன் ரூபாவாகவும், 2023ஆம் ஆண்டு வருமானம் 901.1 மில்லியன் ரூபாவாகவும் இருந்தது. 2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம் பதிவானது.” என்று தெரிவித்தார்.

 

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் பி.யு.ரத்நாயக்க,

”இலங்கைக்கு 2018 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2,333,796 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 2023 முதல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,487,303 ஆக உயர்வடைந்தது அதிலிருந்து 2024 ஜூலை 15 ஆம் திகதி நிலவரப்படி, 1,095,675 குறிப்பிடத்தக்க நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது. ஜனவரி முதல் ஜூன் 2024 வரை சுற்றுலா மூலம் ஈட்டிய மொத்த வருமானம் 1556.64 மில்லியன் டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையானது, பாரிய அளவிலான சுற்றுலா விடுதிகளின் அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டின் மூலம் சுற்றுலா மேம்பாட்டுக்காக அர்பணிக்கிறது. குச்சவெளி, கல்பிட்டி, தெதுவ போன்ற பகுதிகளை முதலீட்டு ஊக்குவிப்பாளர்களுக்கு வழங்க முடியும். யால, குச்சவௌி, கல்பிட்டி போன்ற பகுதிகளும் முதலீடுகளுக்காக திறக்கப்படவுள்ளது.

 

2024 ஆம் ஆண்டளவில், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் 4,534 சுற்றுலா விடுதிகள், 4,923 சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் 2,756 பிற சுற்றுலா சேவை வழங்குநர்கள் என மொத்தம் 12,213 சேவை வழங்குநர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாசிக்குடா மற்றும் மட்டக்களப்பு, கித்துல்கல, கதிர்காமம், மீமுரே, எல்ல, பின்னவல, காலி போன்ற பகுதிகளில் பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடமாடும் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அமுல்படுத்தப்பட்டன.

 

பண்டாரவளை, கதிர்காமம், அனுராதபுரம், நுவரெலியா ஆகிய பகுதிகளில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தேசிய உல்லாச விடுதிகள் இயங்கி வருகின்றன. அளுத்நுவர, மதுனாகலை, துன்ஹிந்த, ரஜனாவ நீர்வீழ்ச்சி, சந்த தென்ன விவசாயத் திட்டம், கெடபருவ சுற்றுலா நிலையம், கல்கிசை சுற்றுலா பொலிஸ் பிரிவு ஆகியன கடந்த இரண்டு வருடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களாகும்.” என்று தெரிவித்தார்.

 

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் எச். சாலக தேவ் கஜபாகு,

 

”இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் கடந்த இரண்டு வருடங்களில் பல வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி, மக்கள் தொடர்பாடல் திணைக்களத்தினால் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட “Seeing is Believing” திட்டத்தின் கீழ், 189 சர்வதேச பயண வலைப்பதிவாளர்கள் மற்றும் தொடர்பாளர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, இலங்கைக்கு ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான ஊடகப் பிரசுரங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.

ஜெர்மனியில் ITB, லண்டனில் WTM, துபாயில் ATM, பிரான்சில் IFTM மற்றும் இந்தியாவில் SATTE உட்பட 15 முக்கிய பயண கண்காட்சிகள் மற்றும் 29 (Roadshows) சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான சந்தைப்படுத்தல் துறையால் பயன்படுத்தப்பட்டன. இந்த விளம்பர நடவடிக்கைகளில் 75இற்கும் மேற்பட்ட பயண முகவர் மற்றும் ஹோட்டல் வல்லுநர்கள் பங்கேற்றனர்.

இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற TAAI (Travel Agents Association of India) மாநாட்டில் 500 இந்திய சுற்றுலா முகவர்களும் 50 இந்திய ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

பல உலகளாவிய சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதல் கட்ட மக்கள் தொடர்பு, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் 2023 ஆம் ஆண்டில் “Sri Lanka – You’ll come back for more” என்ற விளம்பரத் தொனிப்பொருளின் கீழ் புதிய வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தியதுடன், 2024 ஆம் ஆண்டில் அதிகமாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்து அங்கீகாரத்தையும் வென்றது.” என்று தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ்,

”2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்ட இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகத்தின் ஊடாக நடாத்தப்பட்ட கற்கைநெறிகள் மூலம் முறையே 5000, 6000, 8000 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டில் 10000 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்குள் உள்வாங்க எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எமது நிறுவனத்தையும் எமது பாடத்திட்டங்களையும் மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் கைகோர்த்துச் செயற்படுகிறோம். (National School of Business Management), கொரியா – இலங்கை ஹோட்டல் பாடசாலை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு (நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களம்), மற்றும் கம்பஹா விக்கிரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றையும் அதற்காக பெயரிட்டுள்ளோம்.” என்று தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலா பணியகத்தின் பொது முகாமையாளர் கிருஷாந்த பெர்னாண்டோ,

”கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தைப்படுத்தல் துறையின் முக்கிய சாதனைகள் MICE சுற்றுலாப் பயணிகளை அடையாளம் காண இலத்திரனியல் விசா விண்ணப்ப முறைமையில் MICE வகைப்படுத்தல் MICE கண்காட்சியின் இரண்டாவது கட்டத்தை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யவிருக்கிறோம்.

இதற்கு மேலதிகமாக, பல புதிய விளம்பர காணொளிகள் உருவாக்கப்பட்டன. இலங்கை சம்மேளன பணியகத்தின் புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. டிஜிட்டல் மற்றும் இணையத்தள அடிப்படையிலான விளம்பரங்கள் மற்றும் தேடுபொறி உள்ளீடுகள் (SEO) ஆகியவை கடந்த இரண்டு வருடங்களில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 2023 ஆம் ஆண்டில், இலங்கை சுற்றுலா பணியகம் மருத்துவத் துறை தொடர்பான பல சர்வதேச மட்ட மாநாடுகளுக்கு ஆதரவளித்தது, மேலும் இலங்கை சுற்றுலா பணியகம் ஆசிய மற்றும் ஓசியானிய அரசுகளுக்கிடையேயான அமைச்சர்கள் கூட்டம், சர்வதேச பயிற்சியாளர்கள் மாநாடு, ஆசிய பசிபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளின் அமர்வு போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய மாநாடுகளுக்கு நிதி மற்றும் நிதியற்ற உதவிகளை வழங்கியது.” என்று தெரிவித்தார்.