அரசாங்கம் பிழையான வழியில் செல்லும் போது அதனை விமர்சிக்க பின்நிற்க போவதில்லை – சம்பந்தன்

375 0

sampanthan 2364eeபுதிய அரசியல் அமைப்பு ஒன்றின் மூலம் முன்னேற்றமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஆங்கில இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசாங்கம் பிழையான வழியில் செல்லும் போது, அதனை விமர்சிக்க தாம் பின்நிற்க போவதில்லை என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
1972ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு திருத்தத்திலும் 1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு திருத்திலும், இலங்கையின் அனைத்து மக்களது நலன்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.
இந்தநிலையில், புதிய அரசியல் அமைப்பு ஒன்று அனைத்து மக்களுக்கும் அவசியமாகியுள்ளது எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை இலங்கை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.
பொதுவாக இது இலகுவான காரியமல்ல.
பல நாடுகளில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிக காலங்கள் சென்றன.
எனினும் இலங்கை தொடர்பான யோசனை பொறுத்தவரையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  பேரவையில் கொண்டுவரப்பட்ட யோசனையில் இலங்கை அரசாங்கமும் ஒரு அனுசரணையாளராக உள்ளது.
அத்துடன், ஏனைய அனைத்து நாடுகளும் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த யோசனையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஏகமனதாக நிறைவேற்றபட்டுள்ளது.
எனவே, ஜனாதிபதியும் பிரதமரும் இந்த யோசனைகளை உறுதியாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளாதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் அது வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகும்.
எனினும் கூட்டமைப்பு நாட்டின் எதிர்காலத்தில் அக்கரை கொண்டு செயற்படுகினது.
அத்துடன், தமது கூட்டமைப்பு, சமஉரிமைகளை வடக்கு கிழக்கு மக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய இலங்கை ஒன்றை காணுவதற்கு ஆவலாக இருப்பதாகவும் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார்.