இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை – எம்.ஏ.சுமந்திரன்

27 0

ஜனாதிபதி தேர்தலில், ஒரு சமூகத்தை மாத்திரம் மையப்படுத்தி வேட்பாளர் நிறுத்தப்படக் கூடாது என்ற அடிப்படையில், தமிழ் பொது வேட்பாளர் கருத்தியலை ஆதரிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.