நீதிமன்றத்தின் உத்தரவினை அரசாங்கம் ஏற்க மறுப்பது ஆபத்தான அச்சுறுத்தலான விடயம்

66 0

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஆபத்தான விடயம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாசற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

இது அச்சுறுத்தலான ஆபத்தான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கமறுப்பதன் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்தையும்,சட்டத்தின் ஆட்சியையும் அரசாங்கம் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது என அம்பிகா சற்குணநாதன் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னக்கோன் சித்திரவதையில் ஈடுபட்டார் என உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியதால் அவரை பொலிஸ்மா அதிபராக நியமித்திருக்ககூடாது  என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் நீதிமன்றத்தினை புறக்கணித்து அவரை நியமித்தது,பொதுச்சேவையை அரசியல்மயப்படுத்தியது என அவர் தெரிவித்துள்ளார்.