இந்து சமய பாட புத்தங்களில் காணப்படும் குறைபாடுகளை  நிவர்த்தி செய்ய நிபுணத்துவக்குழு அமைக்க முடிவு

309 0
இந்து சமயப் பாடக் கலைத்திட்டத்தில் காணப்படுகின்ற அல்லது சுட்டிக்காட்டப்படுகின்ற விடயங்களை ஆராய்ந்து அவற்றை மாணவர்கள் விரும்பிக் கற்கும் விதத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான ஒரு இந்து சமய பாட நிபுணத்துவக்குழு உருவாக்கப்பட உள்ளது.
இந் குழுவில்
1. கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்¸
2. தேசிய கல்வி நிறுவகம்¸ பரிட்சைத் திணைக்கள பாட விடயங்களுக்கு பொறுப்பான மேலதிகாரிகள்.
3. பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைசார் நிபுணர்கள்
4. மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்
5. இந்து சமய பாட ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் உள் வாங்கபடுவர்.
கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் தொடர்பாகவும் உரிய முறையில் கவனம் செலுத்தாமை காரணமாக பாடத்திட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக இந்து சமயத்தை கஙற்பதில் மாணவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்கும் முகமாக அதற்கென ஒரு புதிய குழு ஒன்றை அமைத்து குறைகள் இணம் கண்டுக் கொண்டுதற்கு அமைய மேற்படி இந்து சமய பாட நிபுணத்துவக்குழு உருவாக்கப்படுகின்றது.
இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்  தலைமையில் கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில்  நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவாநந்தா கல்வி அமைச்சின் வெளியீட்டு தினைக்களத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் மதிவாணன்¸ தேசிய கல்வி நிறுவகத்தின் இந்து சமய பாடத்திற்கு பொருப்பான விரிவுரையாளர் பொன் ஜெயரூபன¸  பேராசிரியர்களான சி.பத்மநாதன்¸ ஏ.என்.கிருஸ்ணவேனி¸ டாக்டர்.க.இரகுவரன் உட்பட ஒய்வுபெற்ற ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.