பிலிப்பைன்ஸில் எரிபொருள் கப்பல் கவிழ்ந்தது

22 0

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே எரிபொருள் கப்பல் ஒன்று இன்று வியாழக்கிழமை (25) கவிழ்ந்ததுள்ளது.

அந்தக் கப்பலில் சுமார் 15 இலட்சம் லீற்றர் எரிபொருள்  இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில கிலோமீற்றர் தொலைவுக்கு எரிபொருள் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

“MT Terra Nova” என்ற கப்பல் அதிகாலையில் பிலிப்பைன்ஸின் மத்திய நகரான Iloilo நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கப்பலில் இருந்த 17 ஊழியர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். அதில்  நால்வருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன ஊழியர் ஒருவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், கடுமையான காற்றும் உயரமான அலைகளும் இடையூறாக உள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் ஜேமி பட்டீஸ்டா (Jaime Bautista) தெரிவித்துள்ளார்.

கப்பல் மூழ்கிய மணிலா விரிகுடா கரையோர பகுதியில் மீனவ சமூகங்கத்தினர் உள்ளதோடு, கப்பல் போக்குவரத்து பாதை, வணிக வளாகங்கள், சூதாட்ட விடுதிகள்  உள்ளன.

கடந்த 2023 ஆம்  ஆண்டு 800,000 லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தின் கடற்கரையில் மூழ்கியது.

எரிப்பொருள் எண்ணெய் அருகிலுள்ள பல மீனவ கிராமங்களின் கரையை அடைந்தது.

அதனால் கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் தலைவலி, வாந்தி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். மேலும், எண்ணெய் கசிவை சுத்தம் செய்ய போலா கிராமத்துக்கு அனுப்பப்பட்ட துப்புரவு பணியாளர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.