தமிழகத்தில் புதிதாக 2.80 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்: அடுத்த மாதம் விநியோகிக்க அரசு திட்டம்

27 0

தமிழகத்தில் உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகளால் நிர்வகிக்கப்படும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டு, அதன்படி பணிகள் நடைபெற்று வந்தன.இதற்கிடையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டதால், குடும்ப அட்டை கேட்டு அதிகளவில் விண்ணப்பங்கள் குவிந்தன. இதையடுத்து, புதிய அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் பெரும்பான்மை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.