ஜேர்மனியில் பழமையான ஹம்பர்க் மசூதிக்கு தடை., ஈரான் எச்சரிக்கை

34 0

ஜேர்மனியின் மிகப் பாரிய மற்றும் பழமையான ஹம்பர்க் மசூதி (Islamic Center Hamburg) மூடப்பட்டுள்ளது.

இந்த மசூதி Blue Mosque என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறது.

நடத்தப்பட்டு வருவதாகவும், ஈரான் அரசுடன் அதற்கு ஆழமான தொடர்பு இருப்பதாகவும் ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அமைப்பு ஹிஸ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பதாகவும், ஈரானில் இஸ்லாமிய புரட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

Blue Mosque Germany, Germany Islamic Center Hamburg, Germany Mosque

ஜேர்மனி ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து 2020ல் தடை செய்தது.

BBC அறிக்கையின்படி, ஜேர்மனியில் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 54 இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

மசூதி தவிர, மக்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான மிகப் பாரிய நடவடிக்கை என விமர்சிக்கப்படுகிறது.

ஈரான் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளது மற்றும் மோசமான விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.