மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் கவிழ்ந்தது குடியேற்றவாசிகளின் படகு- 150க்கும் அதிகமானவர்களை காணவில்லை

32 0
image
மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர்.

ஐரோப்பாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடியேற்றவாசிகளின் படகே கவிழ்ந்துள்ளது என ஐஓம்எம் தெரிவித்துள்ளது.

நீண்ட மீன்பிடிபடகொன்றில் 300 பேர் பயணம் செய்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களது படகு ஏழு நாட்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளது.

கம்பியாவின் பிரோக்கில் 300 பேர் படகில் ஏறினார்கள்,ஜூலை 22ம் திகதி நவாக்சோட் என்ற பகுதியில் படகுகவிழ்ந்துள்ளது என ஐஓஎம் தெரிவித்துள்ளது.

190பேரை தேடும் பணிகள் இன்னமும் இடம்பெறுகின்றன என ஐநாவின் அமைப்பு தெரிவித்துள்ளது.

103 பேர் கரையோர காவல்படையினர் மீட்டுள்ளனர், 25 உடல்களையும் மீட்டுள்ளனர் என கரையோர காவல்படையின் தளபதி தெரிவித்துள்ளார்.

கரையோர காவல்படையினர் அந்த பகுதிக்கு சென்றவேளை ஏற்கனவே 15 பேர் உயிரிழந்திருந்தனர் என 10 பேர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த பகுதியில் வீசிய கடும்காற்று காரணமாக உடல்கள் கரையொதுங்கின் என ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

கடலோர பகுதியில் 30 உடல்களை சேகரிப்பதை நான் பார்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மேலும் பல உடல்கள் மீட்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் ஒரு மாதகாலத்தில் இடம்பெற்ற இரண்டாவது துயரசம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம்ஐந்தாம் திகதி குடியேற்றவாசிகளின் 89 உடல்கள் மீட்கப்பட்டன

 

மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா செல்ல முயலும் குடியேற்றவாசிகளிற்கான பிரதான இடைத்தங்கல் நாடாக மொரெட்டேனியா காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான படகுகள் குடியேற்றவாசிகளுடன் இங்கிருந்து புறப்படுவது வழமை.

ஆபத்தான இந்த பாதையில் பயணிக்கும் படகுகள் ஸ்பெயினின் கனரி தீவுகளை நோக்கி செல்கின்றன – கடந்த வருடம் இந்த தீவிற்கு 40இ000க்கும் அதிகமானவர்கள் வந்து சேர்ந்தனர் என தெரிவிக்கும் ஸ்பெயின் அரசாங்கம் இது முன்னைய ஆண்டை விட அதிகம் என குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பாவிற்கு செல்ல முயலும் குடியேற்வாசிகள் அளவுக்கதிகமானவர்கள் ஏற்றப்பட்ட  படகுகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

2024ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்பெயினை சென்றடைய முயன்ற 4000க்கும் அதிகமானவர்கள் கடலில் உயிரிழந்துள்ளனர் என ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.