தெற்கு அதிவேக வீதியில் இன்று புதன்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்தலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியொன்று முன்னால் பயணித்துக்கொண்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு அதிவேக வீதியில் 174.2 R மைல் கல் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி, உதவியாளர் மற்றும் மற்றைய லொறியின் சாரதி, உதவியாளர் ஆகியோர் காயமடைந்த நிலையில், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது லொறியொன்றின் உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 35 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தெற்கு அதிவேக வீதியின் அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.