க்ளப் வசந்த கொலை ; மேலும் இரு சந்தேக நபர்கள் கைது

68 0

‘க்ளப் வசந்த’ எனப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளிகள் தப்பிச் செல்ல உதவியதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களும் அத்துருகிரிய மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) சந்தேகத்தின் பேரில் 21 வயதுடைய பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை,  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பம் இடம் பெற்ற காலப்பகுதியில் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் 10 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி அத்துருகிரிய சந்தியில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் க்ளப் வசந்த மற்றும் நயன வசுல விஜேசூரிய என்ற 37 வயதான நபர் ஆகியோர் உயிரிழந்தனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் பாடகி கே.சுஜீவா மற்றும் க்ளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட நால்வர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.