கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

391 0

1207-na-matchup-dion-720x480-720x450கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் டியோன் நாளை மறுநாள், இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை செல்கிறார்.
ஜூலை 28 மற்றும் 29ஆம் திகதிகளில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.
இந்த விஜயம், கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு 13வருடங்களுக்கு பின்னர் மேற்கொள்ளும் விஜயமாக அமைந்துள்ளது.
28ஆம் திகதியன்று அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கவுள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர், அன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலும் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை கனேடிய வெளியுறவு அமைச்சர், இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தேசிய கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்துறை அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
ஜூலை 29ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் செல்லும் அவர், வடமாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரையும் குடியியல் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.