கறுப்பு யூலை 41 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு -பிரித்தானியா.

94 0

தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் பாராளுமன்றச் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கறுப்பு யூலை நாளை நினைவு கூர்ந்தனர். பிற்பகல் 3 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வு எமக்கான நீதிவேண்டி பல கொட்டொலிகளை எழுப்பியவண்ணம்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாட்டிருந்தனர். தொடர்ந்து ஆவண நிழற்படக் காட்சிப்படுத்தலும் வேற்றின மக்களுக்கான துண்டறிக்கைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வானது உறுதிமொழி ஏற்புடன் நிறைவுற்றது.