கறுப்பு யூலை தமிழின அழிப்பு 41 ஆவது ஆண்டு நினைவின் யேர்மனி கார்ஸ்றூவ நகரமத்தியில் கண்காட்சி.

156 0

தமிழர்கள் மீதான சிங்கள இனவெறியின் உச்சம்!!!! திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசு நிகழ்த்திய தமிழின அழிப்பே கறுப்பு யூலை!

​“கறுப்பு யூலை” நிகழ்வு காலங்கள் கடந்தாலும் தமிழர்களின் மனதில் ஆறாத காயங்களையும், தீராத வலிகளையும் தமிழர்கள் மனதில் கிளறிக் கொண்டேயிருக்கும். சிங்களப் பேரினவாத அரசு ஆயிரக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த 1983-ம் ஆண்டின் கறுப்பு ஜூலையும், இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த 2009-ம் ஆண்டும் என்றென்றும் தமிழர்கள் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள்.

யேர்மனியில் கார்ஸ்றூவ நகரத்தின் மத்தியில் கறுப்பு யுலையின் சிங்கள இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஒளிப்படங்களும் பதாதைகளும் வைக்கப்பட்டு கண்காட்சி நடாத்தப்பட்டது.   அத்தோடு யேர்மனிய மக்களுக்கு துண்டுப்பிரசுரம் மூலம் சிங்கள இனவாத அரசின் கொடுரமுகம் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. இக் கண்காட்ச்சியானது யேர்மனியின் பல நகரங்களின் மத்தியில் வருகின்ற சனிக்கிழமை வரை நாடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.