கனடா இந்து கோயில் வளாகத்தில் ஆட்சேபகரமான வாசகம் ; விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்!

38 0

கனடாவின் எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து ஆலய வளாகத்தின் அறிவிப்பு பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கனடா பிரிவு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கனடா பிரிவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது…

”எட்மன்டன் நகரில் உள்ள பி ஏ பி எஸ் ( BAPS) சுவாமி நாராயணன் கோயிலில் இந்த செயல் நடைபெற்றுள்ளது. இதில் முரணான வாசகங்கள் சிலவும் கோயிலின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இந்த நாச வேலையை வி ஹெச் பி கனடா கடுமையாக கண்டிக்கிறது.

நாட்டில் அமைதியை விரும்பும் இந்து சமூகத்துக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையிலான இந்த பிரிவினைவாத செயலுக்கு எதிராக தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே கனடாவில் உள்ள இந்து ஆலயங்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும், அதன் தொடர்ச்சியாக தான் எட்மன்டன் சுவாமி நாராயண் ஆலய வளாகத்தில் ஆட்சேபகரமான வாசகங்களை எழுதி சேதப்படுத்தியது அவர்களாக இருக்கலாம் என்ற ஐயம் எழுந்திருக்கிறது என்பதும், இங்குள்ள சீக்கியர்களில் ஒரு பிரிவினர் இந்தியாவிற்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.