வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தார் கஜேந்திரன் எம்பி

46 0
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளதாவது

வெலிக்கடைச்சிறை படுகொலையின் 41 வருடம்.

இன்று மகசீன் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகள் சிலரைச் சந்தித்தோம்.

15 – 29 வருடங்களாக சிறையில் அணுவணுவாகச் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

11 கைதிகளதும் விடுதலைக்காக தமிழ் மக்கள் தீவிரமாக குரல் கொடுக்க வேண்டும்.