ஜேர்மனியில் பரபரப்பு… தூதரகம் ஒன்றிற்குள் நுழைந்து கொடியை அகற்றிய ஆப்கன் நாட்டவர்கள்

50 0

ஜேர்மனியிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் ஒன்றில் திடீரென நுழைந்த ஆப்கன் நாட்டவர்கள் சிலர், பாகிஸ்தான் கொடியை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள ஜேர்மன் தூதரகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், தன் மனைவியுடன் பிரான்ஸ் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தலைவரான Qamar Javed Bajwa என்பவரை, ஆப்கன் நாட்டவர் ஒருவர் மோசமான வார்த்தைகளால் விமர்சித்த விடயம் கவனம் ஈர்த்தது.

பாகிஸ்தான், தாலிபான்களுக்கு ஆதரவளிப்பதால், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தின் விளைவே இந்த சம்பவங்கள் என கருதப்படுகிறது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ஜேர்மனியின் பிராங்பர்ட்டிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்குள் அத்துமீறி நுழையும் ஆப்கன் நாட்டவர்கள், பாகிஸ்தான் கொடியை அகற்றுவதைக் காணலாம்.

 

 

இந்த சம்பவம் தொடர்பாக சிலரை ஜேர்மன் பொலிசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலுள்ள ஜேர்மன் தூதரகத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.