போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டே நடத்தப்படும் என்று, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் – சிதம்பரம் ஆலயத்துக்கு சென்றிருந்த அவர், இந்திய ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளக விடயங்கள் குறித்த விசாரணைக்காக வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான வளம், இலங்கையின் நீதித்துறையில் இருக்கிறது.
தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டில் மறுசீரமைப்பு விடயத்தில் முக்கிய அவதானத்தை செலுத்தியுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து 5000 ஏக்கர் காணிப் பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.