இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வியட்நாம் பிரதமர் ஷூஎங் ஃபூ மற்றும் இரு நாடுகள் அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2017 -2019 ஆண்டுகளுக்கான விவசாய அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான செயற்பாட்டு திட்டம் தொடர்பான உடன்படிக்கையில் வியட்நாம் விவசாய அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார்.
கல்வி ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையில் வியட்நாம் கல்வியமைச்சர் கையெழுத்திட்டுள்ளார்.
வியட்நாமுக்கான இலங்கையின் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க, இலங்கை சார்பில் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.