ஜொன்டி கொலைக்கு முன்பும் பின்னும் கிடைத்த பணம்!

32 0

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவர்களில் ஒருவராக செயற்பட்ட தம்மிக்க நிரோஷன படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் மற்றொரு சந்தேக நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணை குறித்து கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ,

“இதனுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவரும் இன்று (19) கைது செய்யப்பட்டார். அவருக்கு 37 வயதாகும். காலி பிரதேசத்தை சேர்ந்தவர். இந்தக் கொலைக்கு கூர்மையான ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இறந்தவரின் உடலில் கூர்மையான வெட்டுக் காயங்கள் உள்ளன. மன்னா கத்தியால் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌிவந்துள்ளன. இன்று கைது செய்யப்பட்ட நபருடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய பெண்ணை கைது செய்துள்ளோம். அவருக்கு வயது 35. இவர் கொஸ்கொட பிரதேசத்தில் வசிப்பவர். கொலைக்கு முன்னும் பின்னும் இந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் ஒரு தொகை பணம் கிடைத்துள்ளதை அவதானிக்க முடிகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான தொகை இரண்டு சந்தர்ப்பங்களில் கிடைத்துள்ளது. நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இரண்டாவது சந்தேக நபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியாகும். “