ஜேர்மனியில் கடைகளில் அதிகரித்துவரும் திருட்டு சம்பவங்கள்

41 0

ஜேர்மன் பல்பொருள் அங்காடிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

ஜேர்மனியில், பல்பொருள் அங்காடிகள், கடைகளில் நிகழும் திருட்டு சம்பவங்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. 2023ஆம் ஆண்டில், மிக அதிகமாக, 426,096 திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

 

 

என்றாலும், பதிவு செய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை உண்மையில் இந்த எண்ணிக்கையைவிட அதிகம் என கருதப்படுகிறது.

இதனால் பல்பொருள் அங்காடிகளை நடத்துவோர் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுவருகிறார்கள்.

அடிப்படை உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பே இந்த திருட்டு சம்பவங்களுக்குக் காரணம் என கருதப்படுகிறது.

ஆனால், இப்படி திருடப்பட்ட பொருட்களை ஒன்லைனில் விற்று பணம் சம்பாதிக்கவும் ஒரு கூட்டம் பல்பொருள் அங்காடிகள், கடைகளில் திருடுவதும் தெரியவந்துள்ளது.