அரசாங்கம் தேர்தல்நடைமுறைகளை சூழ்ச்சித்திறத்துடன் கையாள முயல்கின்றது

30 0
அரசமைப்பில் தற்போது மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அரசமைப்பிற்கான 22வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  நிறைவேற்றப்பட்டால் 30 நாட்களிற்குள் சர்வஜனவாக்கெடுப்பொன்றை நடத்துமாறு ஜனாதிபதி தேர்தல் ஆணையாளரை  கோரவேண்டிய நிலையேற்படும் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக நாடு சமாந்திரமாக இரண்டு தேசிய தேர்தல்களை  எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்படும்,ஒரு தேர்தலின் பின்னர் மற்றுமொரு தேர்தல் இடம்பெறும் இது குழப்பமான நிலையை ஏற்படுத்தும் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதற்கு பல  பில்லியன்கள் தேவைப்படும் என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் கூட்டு உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு தன்னிடம் நிதியில்லை என அரசாங்கம் தெரிவித்துவருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியினதும் நாடாளுமன்றத்தினதும் பதவிக்காலத்தின் உச்சவரம்பை குறைக்கவேண்டிய அவசியம் இல்லை,முன்மொழியப்பட்ட திருத்தம் தேவையில்லாமல் விடயங்களை குழப்பகரமானதாக்கி தேர்தல் நடைமுறைகளை சீர்குலையச்செய்யும் முயற்சியாகயிருக்கலாம் எனவும் சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள  சட்டமூலத்தை தேர்தல் நடைமுறைகளை சூழ்ச்சித்திறத்துடன்  கையாளும் முயற்சி என குற்றம்சாட்டியுள்ள சட்டத்தரணிகள் அமைப்பு ஜனநாயக சக்திகள் இதனை எதிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.