மீண்டும், மீண்டும் கூறுகின்றேன் அருச்சுனாவின் போராட்டம் நியாயமனது.. இன்று செல்லும் வழி தவறானது..

180 0

எங்களை போன்றவர்கள் உணர்வுகளோடு மாத்திரம் அல்லாமல் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் துள்ளியமாக அவதானித்து அதன் பின் நடைபெறுகின்ற நுண் அரசியலையும் கணிப்பீடு செய்து கொண்டு தான் இந்த அரசியல் களத்தில் நிற்கின்றோம் . !!!!!
மீண்டும், மீண்டும் கூறுகின்றேன் அருச்சுனாவின் போராட்டம் நியாயமனது..
இன்று செல்லும் வழி தவறானது..

சிங்கள பௌத்த பேரினவாத அரசு எங்கள் உணர்வுகளை தூண்டி எப்படி தனது நலன்களை அடையும் என்பதை புரியாதவர்கள் இல்லை. அதிலும் குறிப்பாக ரணில் ஒரு படி மேலானவர். இலங்கை பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது அவர்களுக்கு இன்று தேவைப்படுவது புலம்பெயர்ந்த மக்களின் பொருளாதாரம்.!! (இனப்பிரச்சனைக்கான தீர்வு அல்ல)
அதற்காக பல முகவர்கள் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்கள் 53 பில்லியனாக இருந்தகடன் வட்டி கட்டுவதற்கு பெறப்பட்ட கடனுடன் இன்று 100 பில்லியனாக மாறியுள்ளது .
அத்துடன் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற மக்களா (வறுமை கோட்டின் கீழ்) மாறியுள்ளார்கள். இவற்றை மூடி மறைப்பதற்காக பல திட்டமிட்ட செயல்பாடுகளை பௌத்த பேரினவாத அரசு அரங்கேற்றி வருகின்றது, என்ற உண்மையையும் அதன் நுண் அரசியலையும் நாம் கணிப்பிட தவறுவோமாக இருந்தால் நாம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவோம் ..ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்புக்கு பொறுப்பு கூட முடியதவர்களுக்கு எங்கள் பொருளாதாரம் தேவைப்படுகின்றது. …!!

-குமணன்-