செங்கலடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது – உ.உதயசிறிதர்

459 0

3மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தேசிய நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையினரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தெரிவித்தார்.இன்றைய தினம் செங்கலடி பிரதேசத்தில் நடைபெற்றுவரும் நீர்விநியோக பணிகளை பார்வையிட்டதன் பின்ன கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்

வருடாவருடம் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படுகின்ற செங்கலடி ரமேஸ்புரம் பிள்ளையாரடிவட்டாரம் குமாரவேலியார் கிராமம் போன்ற பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் இன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கினால் அப்பகுதியில் உள்ள கிணறுகளுக்குள் கழிவு நீர் செல்வதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் குடிநீருக்காக மிகவும் கஸ்டப்பட்டுவந்தனா.; இவர்களுக்கான குடிநீர் வழங்கும் செயற்திட்டம் கடந்தவருடம் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும் இன்றையதினம் உன்னிச்சை குடிநீர் திட்டத்தின் ஊடாக இவர்களுக்கான குடிநீர் விநியோகத்தினை தேசிய நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையினர் இன்று வழங்கியுள்ளனர்.

இப்பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை சமூர்த்தி உதவிபெறும் குடும்பங்கள் 5440 ரூபாவையும் ஏனையவர்கள் 17500 ரூபாவையும் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.அத்துடன் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை தவணை முறையிலான பணக்கொடுப்பணவு மூலம் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை பாம்பவுண்டேசன் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

உன்னிச்சை குடிநீர் திட்டத்தின் ஊடாக ஏற்கனவே சித்தாண்டி மாவடிவேம்பு வந்தாறுமூலை கொம்மாதுரை பலாச்சோலை போன்ற பல பகுதிகளுக்கான குடிநீர் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இவர்களுக்கான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று குடிநீர் இன்றி மிகவும் காம்காலமாக கஸ்டப்பட்டுவரும் கரடியணாறு இலுப்படிச்சேனை போன்ற பிரதேசங்களுக்கான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும் முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இக் குடிநீர் விநியோகத் திட்டத்திணை தேசிய நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையின் மாவட்ட பொரியியலாளர் வசந்தராஜ் பிராந்திய முகாமையாளர் பிரகாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலில் செங்கலடி நிலையப் பொறுப்பதிகாரி எம்.விக்னேஸ்வரன் அவர்கள் நடைமுறைப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6