ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவரை சுட்டுக்கொல்ல அவசரம் ஏன்?- எடப்பாடி பழனிசாமி

157 0

வேலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீர் பெறுவது தொடர்பாக தமிழக விவசாயிகள் மீது திமுகவுக்கு கவலையே இல்லை.*

திமுகவுக்கு ஆட்சி அதிகாரமும் இந்தியா கூட்டணியும் தான் முக்கியம். கூட்டணி முக்கியம் என்பதற்காக காவிரி நீர் பெறுவது தொடர்பாக முதலமைச்சர் குரல் கொடுக்கவில்லை.

* கர்நாடக அரசு உரிய நீரை வழங்க வேண்டும்.* விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது.

* மக்களவை தேர்தலில் பொன்முடி தொகுதியில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றது.

* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவரை சுட்டுக்கொல்ல வேண்டிய அவசரம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பினார்.