அங்­கோலா முன்னாள் ஜனா­தி­ப­தியின் மக­னுக்கு ஊழல் குற்­றச்­சாட்டில் 5 வருட சிறைத்­தண்­டனை

39 0

அங்­கோ­லாவின் முன்னாள் ஜனா­தி­பதி ஜோஸ் எடு­வார்டோ டோஸ் சான்­டோஸின் மகன் ஜோஸ் பிலோ­மெனோ டோஸ் சான்­டோ­ஸுக்கு ஊழல் குற்­றச்­சாட்டு தொடர்பில் 5 வருட சிறைத்­தண்­ட­னையை அந்­நாட்டு உச்­ச­நீ­தி­மன்றம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

தற்­போது 46 வய­தான ஜோஸ் பிலோ­மெனோ டோஸ் சான்­டோ­ஸுக்கு 4 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நீதி­மன்­ற­மொன்று 5 வருட சிறைத்­தண்­டனை விதித்­தி­ருந்­தது ஆனால், மேன்­மு­றை­யீட்டில், அந்த தீர்ப்பு இரத்து செய்­யப்­பட்­டது.  தற்­போது அத்­தண்­டனை மீள உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

1979 முதல் 2017 ஆம் ஆண்டு வரை 38 வரு­டங்கள் அங்­கோ­லாவின் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­தவர் ஜோஸ் எடு­வார்டோ டோஸ் சான்டோஸ். அவர் அதி­கா­ரத்­தி­லி­ருந்து வில­கிய பின்னர், அவரின் குடும்­பத்­தினர் ஊழல் குற்­றச்­சாட்டு விசா­ர­ணை­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

அங்­கோலா தேசிய வங்­கி­யி­லி­ருந்து பிரிட்­ட­னி­லுள்ள வங்கிக் கணக்­குக்கு 500 மில்­லியன் டொலர்கள் மாற்­றப்­பட்­டமை தொடர்பில் 2017 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி ஜோஸ் பிலோ­மெ­னோ­வுக்கு எதி­ராக ஊழல் குற்­றச்­சாட்டு வழக்கு தொடுக்­கப்­பட்­டது.

அவரின் தந்தை ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு சில வாரங்­க­ளுக்கு முன்னர் இப்­ப­ணப்­ப­ரி­மாற்றம் இடம்­பெற்­றி­ருந்­தது.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்­நாட்டு நீதி­மன்­ற­மொன்று ஜோஸ் பிலோ­மெ­னோ­வுக்கு 5 வருட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது.

எனினும், அந்­நாட்டு அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் 2020 ஆகஸ்ட் மாதம் இத்­தீர்ப்பை இரத்துச் செய்­த­துடன், வழக்கு விசா­ர­ணையை மீள நடத்­து­மாறு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜோஸ் பிலோமெனோவுக்கு மேற்படி 5 வருட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தி அந்நாட்டு உச்சநீதிமன்றம்  செவ்வாய்க்கிழமை (09) தீர்ப்பளித்துள்ளது.