கெப் வாகனம் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ; 2 இளைஞர்கள் காயம்

41 0

பாதெனிய – அநுராதபுரம் வீதியில் செனரத்கம பகுதியில் இன்று (13) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று, அதன் சாரதி உறங்கியதால் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.