நாட்டை விட்டு வெளியேறும் பணக்காரர்கள்: பிரான்ஸ் எதிர்கொள்ளவிருக்கும் பாரிய பிரச்சினை

35 0

பிரான்ஸ் நாட்டில் வாழும் பணக்காரர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

பிரான்சில் அதிக வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்கலாம் என கருதப்படும் இடதுசாரிக் கட்சி, பணக்காரர்களுக்கு 90 சதவிகித வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பிரான்சில் அடுத்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் இடதுசாரிக் கட்சி, பொதுமக்களுக்காக பெரும் தொகையை செலவிட திட்டமிட்டுள்ளதாம். ஆனால் அதற்கு பணம் வேண்டுமே, ஆகவே, பணக்காரர்களிடமிருந்து வரி வசூலித்து நிதி திரட்ட அந்தக் கட்சி திட்டமிட்டுவருகிறதாம்.

அதுவும், ஆண்டுக்கு 340,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக சம்பாதிக்கும் பணக்காரர்களுக்கு, சுமார் 90 சதவிகிதம் வரை வரி விதிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

ஆகவே, பிரான்சில் வாழும் பணக்காரர்களில் பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறி, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளில் குடியேற ஆர்வம் காட்டிவருகிறார்களாம். இதனால், பிரான்ஸ் பாரிய பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது