யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன் , குறிப்பாக ஓ பாசிட்டிவ் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதியுடைவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரில் வந்து , இரத்த தானம் வழங்கி உயிர் காக்கும் உன்னத பணிக்கு உதவுமாறு யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர் கோரியுள்ளனர்.