தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை தோட்டத்தைச் சேர்ந்த வட்டகொடை மேற்பிரிவு, வட்டகொடை கீழ்பிரிவு மற்றும் யொக்ஸ்போட் ஆகிய தோட்ட பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அத்தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை (12) இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட நாளாந்தம் 1,700 ரூபாய் சம்பளத்தை தமக்கு வழங்க தோட்ட கம்பனிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.நாட்டில் தற்போதைய நிலவும் பொருளாதாரத்துடன் தமக்குக் கிடைக்கும் சம்பளத்தில் வாழ சிரமம் எனவும் தோட்டக் கம்பனிகள், உயர் நீதிமன்றத்தால் பெறப்பட்ட தடை உத்தரவை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.