பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

37 0
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (12) விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

முன்னதாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், தொடர்ந்து, சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் விநியோக நிகழ்வு, தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அரச ஊழியர் குழுவிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

அவற்றினை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புதிய வர்த்தக சேவை நிலைய திறப்பு விழா, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார்.