நுவரெலியாவில் பாரவூர்தி மோதி கோர விபத்து – இருவர் வைத்தியசாலையில்

56 0

நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன்  இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழி அகற்றும் பௌசர் நுவரெலியா மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற காருடன் மோதி மீண்டும் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பாதசாரிகள் கடவையில் நடந்து சென்ற இருவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாகவும் மாநகர சபை வாகனத்தை செலுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த பாரவூர்தி சாரதியின் கவனயீனத்தினாலும், வானத்தின் தடையாளி உரிய வகையில் இயங்காமையால் இவ்விபத்து நேர்ந்துள்ளது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.