அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் யேர்மன் தமிழர் கலைபண்பாட்டுக்கழகமும் இணைந்து நிகழ்த்திய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு.

389 0

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் யேர்மன் தமிழர் கலைபண்பாட்டுக்கழகமும் இணைந்து நிகழ்த்திய இசை, நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு கடந்த 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை முன்சன் நகரில் சிறப்பாக நடாத்தப்பட்டது. இத்தேர்வில் தரம் 7 நிறைவு செய்த 5 நடன மாணவிகளும் 2 வாய்ப்பாட்டு மாணவிகளும் பங்குபற்றியிருந்தனர்.

இவ் ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வின் ஆரம்பநிகழ்வாக எமது மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. மங்கழவிளக்கேற்றல், அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து கலைக்கும் வணக்கம் செய்யும் வகையில் அரங்கில் வீற்றிருந்த நடராசர் சிலைக்கு ஒளியேற்றி வைக்கப்பட்டது. தேர்விற்கான அறிமுகத்துடனும் நடுவர்களின் அறிமுகத்துடனும் தேர்வுகள் ஆரம்பமாகின.

நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வில் முன்சன் தமிழாலய நடன ஆசிரியை ‘முதுகலைமானி, கலைச்சுடர்’ திருமதி.சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகளான

செல்வி. அனிதா இராசதுரை
செல்வி. அபிசா யோகராசா
செல்வி. வானதி நிர்மலதாசன்
செல்வி. நிருசிகா அருணகிரிநாதன்

ஆகியோரும் , திலகநர்த்தனாலய ஆசிரியை ‘கலைமானி, கலைச்சுடர்’ திருமதி. வசுந்துரா சிவசோதி அவர்களின் மாணவியான

செல்வி. மாதங்கி தங்கராசா

அவர்களும் தங்களின் ஆற்றுகைத் திறனை வெளிப்படுத்தியிருந்தனர்.

வாய்ப்பாட்டுத் தேர்வில் கலைவாணி கர்நாட்டிக் ஆசிரியை ‘கலாவித்தகர்’ திருமதி. ஈழவாணி விஜயேந்திரன் அவர்களின் மாணவியான

செல்வி. நேர்த்திகா சிவகுணராஜா

அவர்களும், முன்சன் தமிழாலய வாய்ப்பாட்டு ஆசிரியர் ‘இசைக்கலைமணி’ திரு. ராதாகிருஸ்ணன் திவாகுலன் அவர்களின் மாணவியான

செல்வி. தமிழினி நிர்மலதாசன்

அவர்களும் பங்குகொண்டு தங்களின் இசை ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தனர்.

நடனத்தேர்வின் நடுவர்களாக சுவிசு நாட்டிலிருந்து ‘முதுகலைமானி ‘ திருமதி. கிருஷ்ணபவானி சிறீதரன், ‘முதுகலைமானி ‘ திருமதி. அனுஷா சர்வாணந்தன், யேர்மன் நாட்டிலிருந்து ‘ஆடற்கலைமணி, கலைச்சுடர்’ திருமதி. றெஜினி சத்தியகுமார் ஆகியோர் கடமையாற்றினார்கள். வாய்ப்பாட்டுத்தேர்வின் நடுவர்களாக சுவிசு நாட்டிலிருந்து இசைவித்துவான்களான ‘இசைக்கலைமணி’ திரு. செகசோதி ஆறுமுகம், ‘இசைக்கலைமணி’ திரு. M.S. உமாகாந்தன், மற்றும் ‘இசைக்கலைமணி’ திருமதி. கௌரி செகசோதி ஆகியோர் வருகை தந்திருந்தார்கள்.

இவ் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வானது நிகழ்ச்சிநிரலின் ஒழுங்கிற்கமைவாக திருமதி. கயல்விழி சேரன் அவர்களால் தமிழ்மொழியிலும் செல்வி தினோஜா திருச்செல்வம் அவர்களால் யேர்மன்மொழியிலும் சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள், தமிழாலய நிர்வாகிகள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைவிரும்பிகளென பலர் கலந்து கொண்டு தேர்வுகள் நிறைவுபெறும் வரை தமது ஒத்துழைப்புகளை வழங்கி சிறப்பித்தனர்.