பேர்லினில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா

155 0

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் பேர்லின் தமிழாலயம் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தமிழாலய மாணவர்கள் மற்றும் வெளிவாரி மாணவர்கள் பங்குகொண்ட இல்லங்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளுடன் மற்றும் வளர்ந்தோர்களுக்கான உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி என நடைபெற்றது. விளையாட்டுத் திடல் தாயக நினைவுகளை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டதோடு , இல்லங்களும் மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மாணவச்செல்வங்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றனர். தமிழர் விளையாட்டு விழா விளையாட்டை மட்டும் அல்ல எமது தாயக உணர்வுகளை வெளிப்படுத்தி மக்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெறுவதற்கு தமது ஆதரவை தெரிவித்த நடுவர்களுக்கும், உதவியாளர்களுக்கும் பேர்லின் தமிழாலயம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.