தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அண்ணாமலை வீடு முன்பு ஆர்ப்பாட்டம்

31 0

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகைக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு என்பது நிலவி வருகிறது. இந்நிலையில் அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தினார்.

ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். அதில் குண்டர் சட்டத்தின் கீழ் செல்வப் பெருந்தகையை காவல்துறையினர் கைது செய்ய சென்றபோது அவர் காலை உடைத்துக் கொண்டார். நீங்கள் லண்டனில் முதலீடு செய்த பணம் பற்றிய விஷயத்தை எல்லாம் நான் வெளியே கொண்டு வருகிறேன்.

இதுதான் தமிழகத்தின் தலைவிதி என்றால் அதை கையில் எடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஒவ்வொருவரிடமும் சண்டை போட்டால் தான் தமிழகத்தில் அரசியல் திருந்தும் என்றால் நான் என்னை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன். ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்தவர் செல்வப் பெருந்தகை. அவர் லண்டனில் என்னவெல்லாம் வாங்கியுள்ளார்.

அவர் மனைவி மீது என்ன இருக்கிறது. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் எதற்காக மாற்றி பேசினார்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் பற்றி பேச நான் தயாராக உள்ளதாகவும். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார் என்பது மக்களுக்கு தெரிந்தால் தான் அதை வைத்து அவர்கள் ஓட்டு போடுவார்கள். இது போன்ற நபர்களை நான் படம்பிடித்து காட்டாமல் விடமாட்டேன்.

மேலும் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுவரை குண்டர் சட்டத்தில் கைதான ஒருவர் மாநில தலைவராக இருந்ததில்லை என்று கூறினார்.இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை ரவுடி என கூறியதை கண்டித்து செல்வபெருந்தகையின் ஆதரவாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.