நாட்டில் புகைப்பிடித்தலினால் நாளொன்றுக்கு 50 முதல் 60 மரணங்கள் பதிவாகுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரத்தில் உள்ள சர்வோதய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தினால் இந்த தரவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நாளொன்றுக்கு 16 இலட்சம் பேர் புகைப்பிடிப்பதோடு, அதற்காக நாளொன்றுக்கு 50 கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவழிக்கின்றனர்.
புகைப்பழக்கம் காரணமாக அதிகளவான மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் மத்தியில் புகைப்பழக்கம் 9 வீதமாக குறைவடைந்துள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.