டொனால்ட் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்த கமலா ஹரிஷ்

39 0

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) ஒரு போராளி எனவும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஒரு சர்வாதிகாரி எனவும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஷ் (Kamala Harris) தெரிவித்துள்ளார்.

லாஸ்வேகாஸில் (Las Vegas) அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அமெரிக்காவின் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது எளிதான விடயம் அல்ல எனவும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தையும் சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார் எனவும் கமலா ஹரிஸ் விமர்சித்துள்ளார்.

அதேவேளை, ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வந்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் கருக்கலைப்பை தடை செய்யும் தேசிய கருக்கலைப்பு தடையில் கையெழுத்திடுவார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அவரின் ஆட்சியில் நாட்டின் சமூக பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்படும் எனவும் கமலா ஹரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடவுள்ள நிலையிலேயே கமலா ஹரிஸ் ட்ரம்ப் மீது இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.